×

தமிழக மீனவரை இத்தாலி கடற்படை சுட்ட விவகாரம்… வழக்கை முடிக்க இழப்பீட்டை கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக, கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை சுட்டுக் கொன்ற வழக்கை முடிக்க வேண்டும் என்றால் முதலில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு கேரள கடற்பகுதியில் தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்த இத்தாலிக்கு சொந்தமான கப்பல் அந்த வழியாக வந்துள்ளது. இந்திய மீனவர்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் என்று நினைத்த இத்தாலி கப்பற்படை
 

தமிழக, கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை சுட்டுக் கொன்ற வழக்கை முடிக்க வேண்டும் என்றால் முதலில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு கேரள கடற்பகுதியில் தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்த இத்தாலிக்கு சொந்தமான கப்பல் அந்த வழியாக வந்துள்ளது. இந்திய மீனவர்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் என்று நினைத்த இத்தாலி கப்பற்படை வீரர்கள் அவர்களை நோக்கி சுட்டனர். இதில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கு இந்தியாவிலும் சர்வதேச நீதிமன்றத்திலும் நடந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மீனவர்களை கொன்றவர்கள் மீது இந்தியாவில் வழக்கு நடத்த முடியாது. அதே நேரத்தில் இத்தாலியில் நடத்தலாம். உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இந்தியாவில் நடந்து வரும் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி அரசு தயார் என்று கூறியது.
உயிரிழந்த மீனவர்களுக்கு தலா 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மீனவர்களுக்கு இழப்பீடு தர இத்தாலி தயாராக உள்ளதால், வழக்கை முடித்துவைக்க வேண்டும்” என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி பாப்டே, “இழப்பீடு வழங்குகிறேன் என்று கூறினால் போதாது, இழப்பீட்டுக்கான காசோலையைத் தயார் செய்து கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வழக்கை முடிக்க முடியும். மேலும் இது தொடர்பாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.