×

100 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.. மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி.. மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்டில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர வர்த்தகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டில் உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புஷ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் ஏதாவது அதிரடி திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று
 

உத்தரகாண்டில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர வர்த்தகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டில் உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புஷ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் ஏதாவது அதிரடி திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாமல் இருந்தது.

மின்சாரம்

இந்த நிலையில், நேற்று, வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில மின்சார துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் 100 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 13 லட்சம் நுகர்வோர் உள்ளனர். மாதத்துக்கு 100 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

ஹரக் சிங் ராவத்

மாதத்துக்கு 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பில் வந்தாலும், இந்த திட்டத்தின் நன்மை மாத அடிப்படையில் நுகரப்படும் அலகுகளின் அடிப்படையில் வழங்கப்படும். உதாரணமாக 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுக்கு பில் வந்தால், அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. பால், தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறைகளுக்கும் இந்த இலவச மின்சாரம் மற்றும் மின் கட்டணத்தில் சலுகை பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.