×

கொரோனாவில் இறந்தவர் உடலை மாற்றி தந்த அரசு மருத்துவமனை – இறுதிச் சடங்கு செய்த மகன் அதிர்ச்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூர் உள்ளது. இங்குள்ள ‘கல்லுக்குத்திவிளா’ வீட்டை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 57). இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு அஸ்வதி என்ற மகளும், அனூப் என்ற மகனும் உள்ளனர்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவராஜன் அங்குள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையை சேர்ந்தவர்கள், கொரோனோ
 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூர் உள்ளது. இங்குள்ள ‘கல்லுக்குத்திவிளா’ வீட்டை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 57). இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு அஸ்வதி என்ற மகளும், அனூப் என்ற மகனும் உள்ளனர்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவராஜன் அங்குள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

rep image


மருத்துவமனையை சேர்ந்தவர்கள், கொரோனோ நெறிமுறைகளுக்கு உட்பட்டு அவரது உடலை பிளாஸ்டிக் கவர்களால் மூடி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றிய தகவல் வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் அனூப் என்பவருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவரும் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக விமானம் மூலம் உடனடியாக சொந்த ஊருக்கு வந்தார்.
கடைசியாக ஒருமுறை தந்தையின் முகத்தை பார்க்க விரும்பினார். இதையடுத்து தேவராஜனின் முகத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர் அகற்றப்பட்டது.அப்போது தந்தையின் முகத்தோற்றம் சற்று மாறியிருப்பதாக உறவினர்களிடம் கூறினார். ஆனால் தீவிரமாக ‘டயாலிசிஸ்’ செய்ததால் அப்படித் தெரிகிறது என்று அவர்கள் கூறி விட்டனர்.


இதையடுத்து தேவராஜனின் உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. ஆனாலும் சந்தேகம் தீராத அனூப் இது குறித்து விழிஞ்ஞம் சுகாதார ஆய்வாளரிடம் கூறி, விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் தேவராஜனின் உடல் மாறியிருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே சவக்கிடங்கில் இருந்த இன்னொரு அடையாளம் தெரியாத உடலைத் தந்துள்ளனர்.சவக்கிடங்கு பணியாளர்களின் கவனக் குறைவுதான் இதற்கு காரணம் என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் “ஒரிஜினல்” தேவ ராஜனின் உடல் பெறப்பட்டு மீண்டும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. –இர.போஸ்