×

கேரளாவில் மாற்றுத் திறனாளிக்காக பஸ்ஸை நிறுத்திய பெண்! – குவியும் பாராட்டு

கேரளாவில் பெண் ஒருவர் ஓடிச் சென்று பேருந்து ஒன்றை நிறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் அரசு பஸ் ஒன்று செல்கிறது. பெண் ஒருவர் பஸ்ஸை தொடர்ந்து வேகமாக ஓடுகிறார். அவர் ஓடி வருவதைப் பார்த்த நடத்துநர், பஸ்ஸை நிறுத்துகிறார். நடத்துநரிடம் அந்த பெண் ஏதோ சொல்லிவிட்டு செல்கிறார். பஸ் நின்று கொண்டே இருக்கிறது. அந்த பெண் பார்வையற்ற வயதான மாற்றுத் திறனாளி
 

கேரளாவில் பெண் ஒருவர் ஓடிச் சென்று பேருந்து ஒன்றை நிறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

கேரளாவில் அரசு பஸ் ஒன்று செல்கிறது. பெண் ஒருவர் பஸ்ஸை தொடர்ந்து வேகமாக ஓடுகிறார். அவர் ஓடி வருவதைப் பார்த்த நடத்துநர், பஸ்ஸை நிறுத்துகிறார். நடத்துநரிடம் அந்த பெண் ஏதோ சொல்லிவிட்டு செல்கிறார். பஸ் நின்று கொண்டே இருக்கிறது. அந்த பெண் பார்வையற்ற வயதான மாற்றுத் திறனாளி ஒருவரை அழைத்து வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டுச் செல்கிறார்.

என்ன என்று விசாரித்த போது, பஸ் நிறுத்தத்தில் மாற்றுத் திறனாளி ஏறுவதற்கு முன்னதாக பஸ் வேகமாக புறப்பட்டுவிட்டது. இதனால் அந்த பெண் பஸ்ஸின் பின்னால் ஓடிச் சென்று அதை நிறுத்தினாராம். நடத்துநரிடம், விவரத்தைச் சொல்லி, காத்திருக்கும்படி கூறியுள்ளார். அதனால் பஸ் நின்றுள்ளது. பின்னர் விரைவாக மாற்றுத் திறனாளியை அழைத்துவந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டு தன்னுடைய வழியைப் பார்த்து நடக்கிறார் அந்த பெண். இந்த வீடியோ வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிக்கு உதவிய அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பலரும் அந்த பெண்ணை வாழ்த்தி வருகின்றனர்.