×

நிலச்சரிவில் 6 மாத குழந்தை சடலமாக மீட்பு – 4 வது நாளாக தொடரும் மீட்புபணி!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. The death toll of the landslide in Pettimudi has risen to 43. Despite
 

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் 42 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவில் ஆறு மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கேரள நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 4 வது நாளாக மீட்புபணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்று கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.