×

500 பேர் கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாநிலம் இதுதான்!

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா கடும் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறது. ஏனெனில் உலகளவில் கொரோனா ஏற்படுத்தி பாதிப்புகளின் அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மரணங்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம். இந்தியா தற்போது சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்துக்கும் கீழ் (1,97,201) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1.86 சதவீதம். இது 207 நாட்களுக்குப்பின் ஏற்பட்ட மிக குறைவான எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன்
 

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா கடும் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறது. ஏனெனில் உலகளவில் கொரோனா ஏற்படுத்தி பாதிப்புகளின் அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மரணங்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம்.

இந்தியா தற்போது சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்துக்கும் கீழ் (1,97,201) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1.86 சதவீதம். இது 207 நாட்களுக்குப்பின் ஏற்பட்ட மிக குறைவான எண்ணிக்கை.

கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 3,327 பேர் குறைந்துள்ளனர்.

ஜனவரி 20-ம் தேதி காலை 7 மணி வரை, தமிழகத்தைச் சேர்ந்த 25,908 பேர் உட்பட 6,74,835 பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 3,860 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் மூலம் 2,20,786 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 11,720 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய மாநிலங்களில் ஆந்திராவில் 65,597 பேரும், பீகாரில் 47,395 பேரும், கர்நாடாகாவில் 82,975 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சண்டிகரில் 469 பேர் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.02 கோடி (1,02,45,741). சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடைவெளி இன்று 1,00,48,540 ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.70 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,516 பேரும், கேரளாவில் 4,296 பேரும், கர்நாடகாவில் 807 பேரும் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 79.2 சதவீதம் பேர் 7 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் அதிகபட்சமாக 6,186 பேருக்கும், அடுத்ததாக மகாராஷ்டிராவில் 2,294 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும், தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 162 ஆக உள்ளது.