×

டாப் கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு… தமிழகம்தான் பெஸ்ட் என்பது நிரூபணம்!

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தலைசிறந்த மாநில கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழக பல்கலைக் கழகங்கள் பல இடம் பிடித்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் கல்வி நிலை சரியில்லை என்ற பிரசாரம் சமீப நாட்களாக அதிக அளவில்
 

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தலைசிறந்த மாநில கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழக பல்கலைக் கழகங்கள் பல இடம் பிடித்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் கல்வி நிலை சரியில்லை என்ற பிரசாரம் சமீப நாட்களாக அதிக அளவில்

 

வந்துகொண்டிருக்கிறது. அவற்றுக்கு எல்லாம் மரண அடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது மத்திய அரசின் அட்டல் ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ தகுதிப் பட்டியல்.
இந்த தகுதிப் பட்டியிலில், மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பம்பாய் ஐஐடி, மூன்றாவது இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளன.


பெண்களுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் தமிழகத்தின் அவினாசிலிங்கம் இனஸ்டிடியூட் ஃபார் ஹோம் சயின்ஸ் அன்டு ஹையர் எஜூகேஷன் ஃபார் விமன்ஸ் கல்லூரி பெற்றுள்ளது.


தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வரிசையில் முதல் இடத்தை ஒடிஷாவின் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி, இரண்டாவது இடத்தை எஸ்.ஆர்.எம், மூன்றாவது இடத்தை வேலூர் வி.ஐ.டி, நான்காவது இடத்தை அம்ரிதா விஷ்வ வித்யபீடம், ஐந்தாவது இடத்தை சத்யபாபா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி பிடித்துள்ளன. அதாவது, டாப் ஐந்தில் மூன்றை தமிழக தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பெற்றுள்ளன.


அரசு நிதியுதவியுடன் செயல்படும் தன்னாட்சி கல்லூரிகள் பட்டியலில் முதல் இடத்தை மகாராஷ்டிரா கல்லூரி பெற்றுள்ளது. இரண்டாவது இடம் கர்நாடகாவுக்கும், மூன்றாவது இடம் தமிழகத்தின் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியும் பெற்றுள்ளன. ஐந்தாவது இடத்தில் தமிழகத்தின் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி உள்ளது.


மாநில அரசின் பல்கலைக் கழகங்களில் முதல் இடம் மகாராஷ்டிராவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியும் இரண்டாவது இடத்தை பஞ்சாப் பல்கலைக் கழகமும் பெற்றுள்ளன. தமிழகத்தின் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக் கழகம் இடம் பெறாதது அதிர்ச்சியை அளித்தாலும், எல்லா பிரிவிலும் தமிழக பல்கலைக் கழகங்கள் போட்டிப் போடு இடத்தைப் பிடித்திருப்பது தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.