×

மணமக்கள் சென்ற வேன் விபத்து-4 பேர் உயிரிழந்ததால் திருமணம் நிறுத்தம்

மணமக்கள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் சோமேபல்லில் நடக்கவிருந்த திருமணத்திற்காக மணமக்கள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் சென்றனர். போலீஸ் வாகனத்தில் மொத்தம் 16 பேர் பயணித்தார்கள். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த கதவின் மீது 6 பேர் அமர்ந்து கொண்டு பயணித்து இருக்கிறார்கள். சாலையில் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியதில் பின்கதவு
 

மணமக்கள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் சோமேபல்லில் நடக்கவிருந்த திருமணத்திற்காக மணமக்கள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் சென்றனர். போலீஸ் வாகனத்தில் மொத்தம் 16 பேர் பயணித்தார்கள். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த கதவின் மீது 6 பேர் அமர்ந்து கொண்டு பயணித்து இருக்கிறார்கள்.

சாலையில் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியதில் பின்கதவு கீழே சரிந்தது. இதில் கதவின் மேல் உட்கார்ந்து பயணித்துக்கொண்டிருந்த ஆறுபேரும் கீழே விழுந்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர். மிச்சம் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணமக்களுக்கு மற்றும் உள்ள உறவினர்களுக்கு எந்த காயமும் இல்லை. ஆனாலும் தங்களுடன் வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்திருப்பதால் இந்த விபத்தை அடுத்து காலையில் நடக்க வேண்டிய திருமணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.