×

ஒரேயொரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கும் படகு இயக்கம் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கோட்டயம்: தேர்வெழுதும் ஒரேயொரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கும் படகு இயக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் என்ற பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு (வயது 17) ஆலப்புலாவில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 1 தேர்வினை எழுத இருந்தார். அவருடைய வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கு படகில் செல்ல அரைமணி நேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்கும் வசதி சண்டிராவின் குடும்பத்தில் இல்லை.
 

கோட்டயம்: தேர்வெழுதும் ஒரேயொரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கும் படகு இயக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் என்ற பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு (வயது 17) ஆலப்புலாவில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 1 தேர்வினை எழுத இருந்தார். அவருடைய வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கு படகில் செல்ல அரைமணி நேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்கும் வசதி சண்டிராவின் குடும்பத்தில் இல்லை. தேர்வெழுத செல்வதற்கு தன்னிடம் ரூ.18 மட்டுமே இருப்பதாகவும், அந்த கட்டணத்தில் பள்ளிக்கு சென்று வர படகு சேவையை இயக்க வேண்டும் என மாநில நீர்வழிப் போக்குவரத்து துறையிடம் கோரிக்கை விடுத்தார். இந்த விஷயம் கேரளாவின் மந்திரி ஒருவரின் காதுகளுக்கு சென்றது.

இதையடுத்து சண்டிரா பாபு தேர்வு எழுதுவதற்காக பள்ளி சென்று வர 70 பேர் பயணிக்கும் பெரிய படகு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த படகு காலை 11.30 மணிக்கு கிளம்பி சண்டிராவை பள்ளிக்கு அழைத்து சென்றது. பின்னர் தேர்வு முடிந்து அவர் திரும்பி வீட்டுக்கு போவதற்காக அங்கேயே காத்திருந்து மாலை 4 மணிக்கு சண்டிராவை வீட்டிற்கு அழைத்து சென்றது. இந்த ஒட்டுமொத்த பயணத்திற்காக அந்த மாணவியிடம் ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அந்தப் படகை இயக்குவதற்காக அதில் 5 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர் என்பது இதில் வியப்பான விஷயம்.