×

நேபாளம், காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல்! – உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள காஷ்மீர் மற்றும் நேபாளம் வழியாக பயங்கவராதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. பிரதமர் மோடி இதில் பங்கேற்று தொடங்கிவைக்கிறார். ஆகஸ்ட் 5ம் தேதியை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் முதலாண்டு ஆண்டு வெற்றி விழாவாக கொண்டாட பா.ஜ.க-வினர் திட்டமிட்டு வருகின்றனர். இதை கருப்பு தினம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினத்தில் பயங்கரவாத செயல்களை
 

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள காஷ்மீர் மற்றும் நேபாளம் வழியாக பயங்கவராதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. பிரதமர் மோடி இதில் பங்கேற்று தொடங்கிவைக்கிறார். ஆகஸ்ட் 5ம் தேதியை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் முதலாண்டு ஆண்டு வெற்றி விழாவாக கொண்டாட பா.ஜ.க-வினர் திட்டமிட்டு வருகின்றனர். இதை கருப்பு தினம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினத்தில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டம் தீட்டி வருவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவிவிட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மற்றும் நேபாளம் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவிட்டார்கள் என மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி, காஷ்மீர்,

உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.