×

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்!

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைக் காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினர் சுற்றிவளைத்தனர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர், காஷ்மீர் போலீஸைச் சேர்ந்த
 

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைக் காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினர் சுற்றிவளைத்தனர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர், காஷ்மீர் போலீஸைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டாக பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர். இதில் பயங்கரவாதிகள் அதிக அளவில் கொல்லப்பட்டாலும் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.


முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவில் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கு ஆபத்து என்று கூறப்பட்டது. தற்போது, அதைக் காட்டிலும் அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு நடந்து வருகிறது. அவர்கள் உயிர்த்தியாகம் வீணாகாது என்று அறிவிப்பு வருகிறதே தவிர செயலில் எதுவும் தெரியவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.