×

டெல்லியில் பயங்கரவாத தாக்குதலா?- காவல் ஆணையர் பேட்டி

 

டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள சிக்னலில் வாகனம் ஒன்று மெதுவாக வந்து நின்றபோது மாலை 6.52 மணிக்கு வாகனம் வெடித்ததாக டெல்லி காவல் ஆணையர் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சதீஷ் கோல்சா, “செங்கோட்டை அருகே மாலை 6:52 மணியளவில் மெதுவாக சென்ற கார் சாலையில் சிவப்பு விளக்கில் நிற்கும்போது அதில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் சிலர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். வெடித்த காருக்கு அருகே இருந்த மற்ற கார்களும் சேதம் அடைந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. NIA, தேசிய தடயவியல் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளும் இங்கே உள்ளன. விசாரணைக்கு பிறகே காரணம் தெரியவரும். உள்துறை அமைச்சர் எங்களை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்” என்றார்.