×

போலீசாரை கொல்ல திட்டம்- 10 மாவோயிஸ்ட்டுகள் கைது

 

போலீசாரை கொல்லும் நோக்குடன் வெடி பொருட்களுடன் தெலுங்கானா சத்தீஸ்கர் மாநில எல்லையில் சுற்றி வந்த 10 மாவோயிஸ்ட்களை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் 10 மாவோயிஸ்டுகளை வெடி பொருட்களுடன் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியில் 10 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட எஸ்பி வினீத் தெரிவித்தார். 

இதுகுறித்து  செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் உள்ளூர் போலீசாருடன் , சி.ஆர்.பி.எப் மற்றும் தனிப்படை போலீசார் கூட்டாக  ரோந்து சென்றனர். மாநில எல்லையை ஒட்டிய வனப்பகுதியில்  சிலர் சந்தேகம்படும் வகையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றோரு வாகனத்தில் வெடி பொருட்களை மாற்றி கொண்டுருந்தபோது அவர்களை சுற்றி வளைத்து விசாரிக்கப்பட்டது. இதில் அவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்த், கோட்டி, ராஜு,ரமேஷ், ஆரோக்கியா, சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முஸ்கி சுரேஷ், முஸ்கி ரமேஷ், லாலு, சோபு, மகேஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டது.  

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிமருந்துகள், 500 டெட்டனேட்டர்கள், 90 ஜெலிட்டின் குச்சிகள், 600 கவண்கள், 2 பைக்குகள், 1 டிராக்டர், 1பொலிரோ வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.  சத்திஸ்கர் மாநிலம்  தண்டேவாடாவில்  நடந்த  குண்டுவெடிப்பில் 10 போலீசார் இறப்பை  போன்று மாவோயிஸ்டுகள்  திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீசார்  தகவல் கிடைத்த உடன் சரியான நேரத்தில் அதனை முறியடித்து மாவோயிஸ்ட்களை கைது செய்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.