×

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

 

குழந்தைகளுக்கு பாடம்  கற்பிக்க வேண்டிய தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு அரசு ஆசிரியர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட் நகரில் உள்ள மாருதி நகர் காலனியில் லக்ஷ்மன் நாயக் (38) மற்றும் பத்மா (30) தம்பதி   வசித்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆசிரியராக் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மா, உப்புந்தலா மண்டலத்தில் உள்ள பட்டுகாடிப்பள்ளி தாண்டா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தநிலையில்  பத்மா தடூர்  உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ரத்லவத் கோபி என்ற அரசு ஆசிரியருடன் பழக்கம்  திருமணத்திற்குப் புறம்பான உறவாக தொடர்ந்தார். இதனை அறிந்த லட்ஷமன் நாயக் இந்த உறவை முறித்து கொள்ளும்படி கூறி கண்டித்தார். இதனால் 
தனது கணவர்  திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருந்ததால், அவரைக் கொல்ல விரும்புவதாக காதலம் ஆசிரியர் கோபியிடம்   கூறினார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கவே  இருவரும் சேர்ந்து  கடந்த மாதம் 24 ஆம் தேதி, பத்மாவும் கோபியும் சேர்ந்து  வீட்டில் தூங்கி கொம்டுருந்த லட்சுமண நாயக்கின் மூக்கை  துணியால் மூடி மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். பின்னர் கோபி அன்று இரவே அங்கிருந்து சென்று விட்டார். 

மறுநாள் காலையில், பத்மா என்ன நடக்கிறது என்று தெரியாதது போல் பள்ளிக்குச் சென்று வீட்டு உரிமையாளருக்கு போன் செய்தார். தனது கணவர் உடல் நிலை சரியில்லை என்று கூறினார். என்ன ஆனது என்று தெரியவில்லை, எத்தனை முறை போன் செய்தாலும் போன்  எடுக்கவில்லை என்று கண்ணீருடன்  கூறினாள். பின்னர்  வீட்டிற்கு வந்ததும் தனது கணவர் வீட்டில் இறந்துவிட்டதாக அவரையும் நம்ப வைக்க முயன்றார். இருப்பினும் லட்சுமண நாயக்கின் தம்பி சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்தார். இதனால் போலீசார் விசாரணை நடத்தியதில் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருந்த கணவரை  திட்டமிட்டு  கொலை செய்ததை கண்டறிந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது கொலை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து பத்மாவை பிடித்து விசாரணை செய்ததில் உண்மையை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து  பத்மா,  கோபி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.