×

வளர்ப்பு நாய்க்கு எடைக்கு எடை வெல்லம் வைத்து காணிக்கை - நடிகையின் செயலால் சர்ச்சை

 

தெலங்கானாவில் ஆதிவாசிகள் கொண்டாடும் மெடாரம் திருவிழாவில் வளர்ப்பு நாயை எடைக்கு எடை வைத்து வெல்லம் காணிக்கையாக செலுத்திய நடிகையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலத்தில் ஆதிவாசிகளின் கிராம தேவதையாக வழிபாடு செய்து 1 மாதம் திருவிழாவாக மெடாரம் ஜாத்திரை கொண்டாடப்படும். இதில் தெலங்கானா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வழிப்பட்டு தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வெல்லம் எடைக்கு எடை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வார்கள். இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த நடிகை டினா ஸ்ரவ்யா தனது வளர்ப்பு நாயை மெடாரம் திருவிழாவிற்கு அழைத்து சென்று அங்கு அதன் எடைக்கு நிகராக வெல்லம் காணிக்கையாக செலுத்தினார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததால் இந்த வீடியோ வைரலானது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து ஆதிவாசிகள் வழிபடும் தெய்வதை இழிப்படுத்தும் வகையில் நடிகை இவ்வாறு செய்ததாக குற்றம்சாட்டினர்.  இது கோயில் மரபுகள் மற்றும் தெய்வத்தின் புனிதத்தை அவமதிப்பதாக சமூக ஊடக தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.  இ

தனையடுத்து நடிகை டினா ஸ்ரவ்யா உடனடியாக  உணர்ச்சிபூர்வமான வீடியோவை வெளியிட்டு பதிலளித்தார். அதில் தனது செல்லப்பிராணி உயிருக்கு ஆபத்தான கட்டியால் அவதிப்பட்டு  அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றியதாகவும், அந்த நாய்  நன்றாக உயிர்வாழ வேண்டும் என்று மெடாரம் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ததாகவும், தனது செல்லப்பிராணியின் மீதான அன்பினாலும், அது குணமடைந்ததற்கு நன்றியுணர்வுடனும் இந்த காணிக்கை செலுத்தியதாகவும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் "நான் என் பக்தியை வெளிப்படுத்த விரும்பினேன், மரபுகளை மீற விரும்பவில்லை" என்று அவர் கூறினார். இறுதியாக, டினா தனது செயலால் யாராவது மனம் புண்படும்வகையில் காயமடைந்திருந்தால், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்றும், இந்து மரபுகளையும் பக்தர்களின் நம்பிக்கைகளையும் எப்போதும் மதிப்பேன் என்றும் அவர் கூறினார். செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களாகக் கருதுவதில் ஏற்பட்ட தவறைத் தவிர, இதில் எந்தத் தீமையும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியதால் இந்த சர்ச்சை ஓய்தது.