×

தமிழ்நாடு 4-ம் இடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியல்

தமிழ்நாடு கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. அது நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் மற்ற மாநிலங்களின் அளவுக்கு எண்ணிக்கை கீழே இறங்க வில்லை. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்திற்கும் குறைவாக 2,47,220 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 37 நாட்களாக புதிய தொற்றுக்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 20,923 பேர் புதிதாக குணமடைந்தனர். நாட்டில் மொத்தம் 99,27,310 பேர் (96.16%) குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களில் 78.10 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4985 பேரும், மகாராஷ்டிராவில் 2110 பேரும், சத்தீஸ்கரில் 1963 பேரும் குணமடைந்துள்ளனர். கேரளாவில் 5328 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3218 பேரும், சத்தீஸ்கரில் 1147 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 69.59 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 51 பேரும், மேற்கு வங்காளத்தில் 28 பேரும், கேரளாவில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்திய மாநிலங்கள் அளவில் புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு 4-ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் கேரளா இருக்கிறது. இரண்டாம் இடம் மகாராஷ்டிரா. இறப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு 7-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் மேற்கு
 

தமிழ்நாடு கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. அது நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் மற்ற மாநிலங்களின் அளவுக்கு எண்ணிக்கை கீழே இறங்க வில்லை.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்திற்கும் குறைவாக 2,47,220 ஆக பதிவாகியுள்ளது. 

 கடந்த 37 நாட்களாக புதிய தொற்றுக்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 20,923 பேர் புதிதாக குணமடைந்தனர். 

நாட்டில் மொத்தம் 99,27,310 பேர் (96.16%) குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களில் 78.10 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4985 பேரும், மகாராஷ்டிராவில் 2110 பேரும், சத்தீஸ்கரில் 1963 பேரும் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் 5328 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3218 பேரும், சத்தீஸ்கரில் 1147 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 69.59 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே  சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 51 பேரும், மேற்கு வங்காளத்தில் 28 பேரும், கேரளாவில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்கள் அளவில் புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு 4-ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் கேரளா இருக்கிறது. இரண்டாம் இடம் மகாராஷ்டிரா.

இறப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு 7-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் மேற்கு வங்கமும் இருக்கின்றன.

.