×

"தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி" -  பிரதமர் மோடி பேச்சு 

 

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி ; அது உலகின் மிகவும் பழமையான மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சென்று நிலையில் இன்று இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜி 7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கடந்த 19ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கியது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார் .அவருக்கு ஹிரோஷிமாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் , ஜி 7 கட்டமைப்பு கூட்டமைப்பு மாநாட்டிலும் அவர் உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து மே 22 ஆம் தேதி ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினிக்கு சென்றார்.  அங்கு தலைநகர் போர்ட் மோர் ரெஸ்பியில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் பப்புவா நியூ கினி நாட்டின் தேசிய மொழியான டோக் பிசின் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். மூன்று நாடுகளில் சுற்றுப்பயணத்தின் இறுதியாக 23ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னி நகரில் 21 ஆயிரம் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் அரசு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்திய பேசிய பிரதமர் மோடி,  நமது நாட்டின் கலாச்சாரம் பற்றி பேசும்போது உலகத்தின் கண்களை பார்க்கிறேன் . இந்தியாவில் நாங்கள் அதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க நீங்கள் கொடுத்த நம்பிக்கையால் வந்தது.  இங்கு வந்துள்ளவர்கள் இந்தியாவை  நேசிப்பவர்கள் ; பிரதமர் மோடியை அல்ல . தமிழ் மொழி நமது மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி,  உலகின் பழமையான மொழி . திருக்குறள் புத்தகத்தின் டோ க் பிசின்  மொழிபெயர்ப்பை  வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இது புத்தர், காந்தியின் தேசம் என்று சொல்ல விரும்புகிறேன். நமது எதிரிகள் மீது கூட நாங்கள் அக்கறை கொள்கிறோம் .இந்தியா என்ன நினைக்கிறது என்பதை இன்று உலகம் அறிய விரும்புகிறது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மகத்தான பாரம்பரியம் பற்றி பேசும்போது அடிமை மனப்பான்மையில் மூழ்கி விடாதீர்கள். தைரியமாக பேசுங்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.