×

சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்

சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். கல்லீரல் நோய்க்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுவாமி அக்னிவேஷ் இன்று மாலை 6.30 மணிக்கு காலாமானார். 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்த அக்னிவேஷ், இந்திய அரசியல்வாதியாவார். அரியானா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆரிய சமாஜ அறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தவர். 1981இல் நிறுவப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை
 

சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். கல்லீரல் நோய்க்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுவாமி அக்னிவேஷ் இன்று மாலை 6.30 மணிக்கு காலாமானார்.

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்த அக்னிவேஷ், இந்திய அரசியல்வாதியாவார். அரியானா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆரிய சமாஜ அறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தவர். 1981இல் நிறுவப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடியதன் மூலம் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். 1875 ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட ஆரிய சமாஜ இயக்க உலக மன்றத்தின் தலைவராக (2004-2014) இருந்தார். மேலும் 1994 முதல் 2004 வரை ஐக்கிய நாடுகள் அவையின் அடிமைத்தனத்திற்கு எதிரான தன்னார்வ அறக்கட்டளை நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.