×

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் சூரியா ஆதரவும் இந்தி எதிர்ப்பும்!

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் சூரியா ஆதரவும் இந்தி எதிர்ப்பும்!ட்விட்டரில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக #TNStandWithSuriya என்ற ஹேஷ் டேகும், இந்திக்கு எதிராக #StopHindiImposition என்ற ஹேஷ் டேகும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகம்
 

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் சூரியா ஆதரவும் இந்தி எதிர்ப்பும்!
ட்விட்டரில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக #TNStandWithSuriya என்ற ஹேஷ் டேகும், இந்திக்கு எதிராக #StopHindiImposition என்ற ஹேஷ் டேகும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.


நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகம் சூர்யாவுடன் துணை நிற்கும் என்ற அர்த்தத்தில் #TNStandWithSuriya என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் முன்னிலை பிடிக்கத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் அந்த ஹேஷ் டேகை வைத்து ட்வீட் வெளியிட்டு சூர்யாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


அதே போல் இந்தி தினத்தையொட்டி நாட்டை ஒருங்கிணைக்க இந்தி உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு எதிராக இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி ட்வீட் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.

இந்திய அளவில் அதுவும் இடம் பிடித்துள்ளது. தமிழ் நாடு மட்டுமின்றி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி என பல மொழிகளைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான ட்வீட் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரே நாளில் பா.ஜ.க-வுக்கு எதிராக இரண்டு ட்வீட்கள் டிரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.