×

யுபிஎஸ்சி தேர்வில் விடுபட்டவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வைக் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 4ஆம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி (இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்) நடத்தியது. கொரோனா பரவல் காரணமாக அத்தேர்வு சுமார் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. இதனிடையே கொரோனா பரவல் அச்சம் காரணமாக முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ரச்னா சிங் என்ற தேர்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
 

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வைக் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 4ஆம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி (இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்) நடத்தியது. கொரோனா பரவல் காரணமாக அத்தேர்வு சுமார் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

இதனிடையே கொரோனா பரவல் அச்சம் காரணமாக முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ரச்னா சிங் என்ற தேர்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்காத நீதிமன்றம், வயது வரம்பின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டுடன் யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது தொடா்பாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும் யுபிஎஸ்சிக்கும் பரிந்துரைத்திருந்தது.

ஆரம்பத்தில் கூடுதல் வாய்ப்பு வழங்க மத்திய அரசு மறுத்தது. இச்சூழலில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பதிலளித்த மத்திய அரசு கொரோனா காரணமாக தேர்வெழுதும் கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க அனுமதியளிப்பதாகக் கூறியது. இது மனுதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மனுதாரர் கொரோனாவை மட்டுமே காரணமாக கூறவில்லை. தனிப்பட்ட காரணங்களையும் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அதேபோல வயது கடந்தவர்களுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை அனுமதிக்க முடியாது. ஆகவே யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது” என்று தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.