×

‘2017-2018ல் 148 லாக்அப் மரணங்கள்’.. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் காவல் மரணங்கள் வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச்சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து மகேந்திரன் என்பவரும் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2017- 2018 வரையில் 148 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லாக்அப் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.