×

குர்ஆனில் 26 வசனங்களை நீக்க கோரி வழக்கு… ‘அற்பத்தனமான மனு’ என உச்ச நீதிமன்றம் விளாசல்!

தொடர்ந்து இந்த்துவத்திற்கு ஆதரவாகக் கொடி பிடித்து இஸ்லாமியத்திற்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைக் கருத்தைகளைக் கூறி வருபவர் உபி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஷியா வக்ஃபு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி. சமீபத்தில் இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இஸ்லாமிய தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில், இஸ்லாமியர்களின் புனித குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும் எனவும், அந்த வசனங்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு எதிராக வன்முறையைக் கற்பிப்பதாகவும், இஸ்லாமியர்கள் இடையே பயங்கரவாதத்தை வளர்ப்பதாகவும்
 

தொடர்ந்து இந்த்துவத்திற்கு ஆதரவாகக் கொடி பிடித்து இஸ்லாமியத்திற்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைக் கருத்தைகளைக் கூறி வருபவர் உபி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஷியா வக்ஃபு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி. சமீபத்தில் இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இஸ்லாமிய தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

source: live law

அந்த மனுவில், இஸ்லாமியர்களின் புனித குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும் எனவும், அந்த வசனங்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு எதிராக வன்முறையைக் கற்பிப்பதாகவும், இஸ்லாமியர்கள் இடையே பயங்கரவாதத்தை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிஸ்வியை ஷியா, சன்னி என இரு பிரிவினருமே கடுமையாக விமர்சித்தனர். புனிதக் குர்ஆனையும், இறைத் தூதர் முகம்மது நபியையும் அவர் அவமதித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இச்சூழலில் இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின்போது ரிஸ்வியைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், இது மிகவும் அற்பத்தனமான மனு என்று கூறி தள்ளுபடி செய்தனர். மேலும் இதுபோன்ற பொதுநல மனுவைத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததால் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாமிய தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்று கூறிக்கொள்ளும் ரிஸ்வி, தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் ஆதரவாக தொடர்ந்து பேசிவருகிறார். ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்த ரிஸ்வி மீது, 2016, 2017ஆம் ஆண்டுகளில் லக்னோ மற்றும் அலகாபாத்தில் வக்ஃபு வாரிய நில ஆக்கிரமிப்பு மற்றும் லஞ்ச வழக்குகள் பதிவாகின. கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்விரண்டு வழக்குகளும் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பயந்துகொண்டே மோடியை ஆதரிப்பதாகவும், இஸ்லாமியத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறிவருவதாகவும் இன்னபிற இஸ்லாமிய தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.