×

நடிகர் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.. இது நீதிக்கான சிறந்த நாள்… சுப்பிரமணியன் சுவாமி

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை திரட்டியுள்ள ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி மும்பை போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுஷாந்த் சிங் மரணததை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. தற்போது உச்ச நீதிமன்றம் நடிகரின் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டதை, இது நீதிக்கான சிறந்த நாள் என
 

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை திரட்டியுள்ள ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி மும்பை போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுஷாந்த் சிங் மரணததை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. தற்போது உச்ச நீதிமன்றம் நடிகரின் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டதை, இது நீதிக்கான சிறந்த நாள் என அவர் பாராட்டியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக கூறியதாவது: இது நீதிக்கான சிறந்த நாள். அரசாங்கங்களால் நீதியை வழங்காது ஆனால் நீதிமன்றத்தால் முடியும் என எண்ணிய பல பத்து லட்சம் மக்களின் மனங்களை உச்ச நீதிமன்றம் வென்றுள்ளது. அது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முதல் நாள் முதல் சரியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆரம்பத்தில் இருந்தே சி.பி.ஐ. விசாரணைக்கு நான் அழைப்பு விடுத்தேன், என்ன நடந்து இருக்கும் என்று எனக்கு ஒரு யோசனை உள்ளது.

மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை காவல்துறையின் உடந்தையை சி.பி.ஐ. மட்டுமே விசாரிக்க முடியும். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நீதிக்கான நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது நீதி நிச்சயமக நடக்கப்போகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கொலையில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். நீதிபதிகளுக்கு அதிக அழுத்தம் இருப்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.