ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம் - மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
Jul 28, 2024, 12:45 IST
டெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது. பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கினர்.
இதனிடையே பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ராஜேந்திரநகரில் படேல்நகரில் மேலும் ஒரு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.