இது போராட்டமா? நீரில் நனைந்து நடனமாடும் மாணவர்கள்!
பாட்னாவில் நடந்த நீட் வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலைத் தணிப்பதற்காக நீரை பீய்ச்சி அடிக்குமாறு மாணவர்கள் கிண்டலாக கோரிக்கை வைத்ததை அடுத்து போலீசார் அவர்கள் மீது நீரை பீய்ச்சி அடித்தனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரையிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | பாட்னாவில் நடந்த நீட் வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலைத் தணிப்பதற்காக நீரை பீய்ச்சி அடிக்குமாறு மாணவர்கள் கிண்டலாக கோரிக்கை வைத்ததை அடுத்து போலீசார் அவர்கள் மீது நீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது நீரில் நனைந்து மாணவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில்… pic.twitter.com/LRHnmXbEDA
— Sun News (@sunnewstamil) July 23, 2026
இந்நிலையில் பாட்னாவில் நடந்த நீட் வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலைத் தணிப்பதற்காக நீரை பீய்ச்சி அடிக்குமாறு மாணவர்கள் போலீசிடம் கிண்டலாக கோரிக்கை வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், "போலீஸ் சார், எங்கள் மீது ஏன் தண்ணீர் பீய்ச்சியடிக்கவில்லை, வெயில் மிகவும் சூடாக இருக்கிறது" என்று நகைச்சுவையாக கூறினர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது நீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் மாணவர்கள் ஓடிப்போவதற்கு பதிலாக நடனமாட தொடங்கினர். நீரில் நனைந்து மாணவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.