☰
×

ஸ்பேம் கால் செய்தால் கடும் நடவடிக்கை

 

புகார் வராவிட்டாலும், ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


புகார் வராவிட்டாலும், ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நபர் அல்லது நிறுவனத்துடன் தொடர்புடைய 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் 10 நாட்களுக்குள் ஸ்பேம் அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த இணைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல் முறையாக சிக்கினால், அந்த அனுப்புநரின் அனைத்து இணைப்புகளிலும் வெளிச்செல்லும் அழைப்புகள் குறைந்தது 15 நாட்களுக்கு முடக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மீண்டும் சிக்கினால், சிம் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் ஓராண்டுக்கு துண்டிக்கப்படும்; புதிய இணைப்புகள் பெறவும் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும், விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை முழுமையாகத் தடுக்க 'BLOCK PROMO' என 1909-க்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என TRAI விதிகளின்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.