×

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால்… மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உள்துறை!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் ஜன.16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள வீரர்களான சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சம் உள்ள நிலையில், சிலர் தேவையில்லாமல் வதந்திகளைக் கிளப்புவதாகப்
 

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் ஜன.16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள வீரர்களான சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

ஏற்கனவே மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சம் உள்ள நிலையில், சிலர் தேவையில்லாமல் வதந்திகளைக் கிளப்புவதாகப் புகார் எழுந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.