×

கொரோனா மரணமா?… 1 மாதத்திற்குள் ரூ.50 ஆயிரம் இழப்பீடு – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது. பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக 60 நாட்கள் வரை வழங்க வேண்டும். பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை
 

கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது. பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக 60 நாட்கள் வரை வழங்க வேண்டும்.

பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தகவல்கள் உள்பட கொரோனா சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முந்தைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், கொரோனா நிவாரணமாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்றது. கொரோனாவுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, பிற நோய்களுக்கு அதை மறுப்பது நியாயமற்றதாகி விடும்.

சுமார் 4 லட்சம் பேர் இறந்துள்ளதால், இப்போதும் இருக்கும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் 4 லட்சம் கொடுப்பது இயலாத காரியம். பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு பொருந்தும் என்று பேரிடர் மேலாண்மை சட்டம் கூறுகிறது என்று விளக்கிய அரசு, தொற்றுநோய்களின் தீவிரம் காரணமாக கொரோனாவுக்கு அந்த விதிகள் பொருந்தாது என்றது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கட்டாயமாக இழப்பீடு வழங்கியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இன்னும் ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர். இச்சூழலில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மாநில அரசுகள் வழங்கவேண்டும். வரும் காலங்களில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.