சிகிச்சை சென்றவரை பிணவறையில் தள்ளிய ஊழியர்கள்! இரவு முழுவதும் சடலங்களுக்கு மத்தியில் இருந்த சோகம்
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் இறந்ததாக நினைத்து உயிருடன் இருந்தவரை பிணவறையில் வைத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடூர் மண்டலத்தில் உள்ள ஜெய்யாராம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மூன்று நாட்களுக்கு முன்பு சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு மஹபூபாபாத் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு உதவியாளர் மற்றும் ஆதார் கார்டு கூட இல்லாதயால் மருத்துவமனை ஊழியர்கள் ராஜுவை சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் ராஜு இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்தார், உணவு பற்றாக்குறை மற்றும் நோய் காரணமாக அவர் மயக்கமடைந்தார். ராஜு அசையாமல் கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் இறந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து பிணவறைக்கு அழைத்துச் சென்று உள்ளே வைத்து பூட்டினர். அன்றிரவு முழுவதும் பிணவறையின் மிகவும் குளிரான சூழ்நிலையில் உயிருடன் இருந்த ராஜு பயந்து போனார். மறுநாள் காலை, பிணவறையை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் ராஜுவின் உடலில் அசைவு மற்றும் லேசான அழுகையைக் கண்டறிந்தார். உடனடியாக, மேற்பார்வையாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து பிணவறையைத் திறந்து ராஜுவை வெளியே எடுத்தனர். உயிர் பிழைத்த ராஜு ஏ.எம்.சி வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொடூரமான சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகளும் பொது அமைப்புகளும் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆதார் என அரசு மருத்துவமனைக்கு வந்தவரை சிகிச்சை மறுத்ததற்கும், உயிர் பிழைத்த நபரை பிணவறையில் அடைப்பதற்கும் ஊழியர்களின் அலட்சியத்தின் உச்சக்கட்டம் என்று விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலளித்த மருத்துவமனை அதிகாரிகள், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் நோயாளிகளுக்கு ஆதார் அட்டை அல்லது உதவியாளர் இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்கு தவறாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.