×

70% மின் கட்டணம் செலுத்தினால் போதும்! கேரள மாநில அரசு அதிரடி!!

பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவிலும் இதே நிலை இருப்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அம்மாநில மின்வாரியம் மின்கட்டணத்தில் சலுகை அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, மானியத்தை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும் வரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண
 

பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவிலும் இதே நிலை இருப்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அம்மாநில மின்வாரியம் மின்கட்டணத்தில் சலுகை அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதன்படி, மானியத்தை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும் வரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண மானியம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வேலை செய்வோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மின் கட்டணத்தை 5 தவணைகளில் செலுத்தலாம் எனவும் கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது.