×

சீன படையினரை வீட்டுக்கு அனுப்ப லடாக்குக்கு நடிகர் சோனு சூட்டை அனுப்புங்க….. ஆகர் படேல்

லாக்டவுனால் மகாராஷ்டிராவில் செய்வதறியமால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்கள் செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் லைப்பில் கதாநாயகனாக நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி மக்களின் மனதை வென்றார் சோனு சூட். புலம்பெயர்ந்தவர்களின் மீட்பர் எனவும் சோனு சூட்டை செல்லமாக கூறுகின்றனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகர் படேல், இந்தியா
 

லாக்டவுனால் மகாராஷ்டிராவில் செய்வதறியமால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்கள் செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் லைப்பில் கதாநாயகனாக நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி மக்களின் மனதை வென்றார் சோனு சூட். புலம்பெயர்ந்தவர்களின் மீட்பர் எனவும் சோனு சூட்டை செல்லமாக கூறுகின்றனர்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகர் படேல், இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக, சோனு சூட்டை குறிப்பிட்டு ஒரு நகைச்சுவையான ஆலோசனையை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆகர் படேல் டிவிட்டரில், என்னுடைய ஐடியா- சீனர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப லாடக்குக்கு சோனு சூட்டை அனுப்புங்க என நகைச்சுவையாக பதிவு செய்து இருந்தார்.

இதற்கு நடிகர் சோனு சூட் வெடித்து சிரிக்கும் அளவுக்கு அளவுக்கு ஒற்றை வரியில் பதில் அளித்து இருந்தார். சோனு சூட் பதில் டிவிட்டில், சீன நபர்களின் விவரங்களை அனுப்பவும் என பதிவு செய்து இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்களுக்கு சோனு சூட் உதவியதை சிவ சேனா விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.