×

காங்கிரஸின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகல்?!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதனால் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் சமீப காலமாக ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்றும் சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்றும் கட்சிக்குள்ளே சலசலப்புகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து ஆலோசிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் நாளை இணைய வழியாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம்
 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதனால் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் சமீப காலமாக ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்றும் சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்றும் கட்சிக்குள்ளே சலசலப்புகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து ஆலோசிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் நாளை இணைய வழியாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே காங்கிரஸின் மூத்த தலைவர்கள் 23 பேர் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில், கட்சியில் நீடிக்கும் சலசலப்பு வேதனை அளிப்பதாகவும் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. காங்கிரஸ் தற்போது வலுவாக இல்லாத நிலையில் உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின்றன.