×

உண்ணாவிரதப் போராட்டம் தொடர்வதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு 

 

 

அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை இளைஞர்கள் பிரதிநிதி சந்திக்கும்வரை உண்ணாவிரதம் தொடரும் என சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார்.


நாடு முழுவதும் தேசியத் தேர்வு மையம் (NTA) நடத்தும் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள், 10 முறை NEET வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேற்கண்ட முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் சிறை வைத்திருக்கின்றனர்.

தனது கணவர் கையால் எழுதிய செய்தி ஒன்றை வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் எனது உண்ணாவிரதத்தைத் (23-ஆம் நாள்) தொடர்வேன்.  அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்களை இளைஞர்கள் பிரதிநிதி சந்திக்கும்வரை
அல்லது நான் இங்கு மருத்துவமனையில் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்துள்ளேன்," என்று வாங்சுக் தனது கையொப்பத்துடன் கூடிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.