×

ஓடிடி தளத்தில் ஆபாச படம் ஓட்டிய என்ஜினியர் -பலான வேலையில் பாகிஸ்தான்

ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவர் 22 நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக ஒரு ஆபாச ஓடிடி வெப்தளத்தை பாகிஸ்தான் நாட்டவருடன் சேர்ந்து கொண்டு நடத்தி, அதில் பல ஆபாச படங்களை ஒளிபரப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர் . மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஒரு ஓடிடி தளத்தில் 22 நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக பல ஆபாச படங்களை ஒளிபரப்பியுள்ளார் .இந்த தளத்தை பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஹுசைன் அலி என்பவர் அங்கிருந்தே நிர்வகித்துள்ளார் .ஆனால் அதற்கான ஆபாச
 

ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவர் 22 நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக ஒரு ஆபாச ஓடிடி வெப்தளத்தை பாகிஸ்தான் நாட்டவருடன் சேர்ந்து கொண்டு நடத்தி, அதில் பல ஆபாச படங்களை ஒளிபரப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர் .

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஒரு ஓடிடி தளத்தில் 22 நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக பல ஆபாச படங்களை ஒளிபரப்பியுள்ளார் .இந்த தளத்தை பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஹுசைன் அலி என்பவர் அங்கிருந்தே நிர்வகித்துள்ளார் .ஆனால் அதற்கான ஆபாச படங்களை இந்தூரிலுள்ள ஒரு பண்ணை வீட்டிலிருந்து படம் பிடித்து அவருக்கு அனுப்பி, அதை 22 நாடுகளில் பார்க்கும் விதமாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பியுள்ளாரகள் .
கடந்த செவ்வாய்க்கிழமையன்று போலீசுக்கு இந்த மோசடி பற்றி தகவல் கிடைத்ததும் அதிரடியாக போபாலிலுள்ள அந்த அலுவலகத்துக்குள் புகுந்த போலீசார் அந்த சாப்ட்வேர் என்ஜினீயரை கைது செய்தார்கள் .மேலும் அவரோடு சேர்ந்து இந்த வேலைகளை செய்ததாக இன்னும் ஆறு பேரை கைது செய்தார்கள் .மேலும் பலரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் .ஆனால் பாகிஸ்தானிலிருந்து இந்த ஓடிடி தளத்தை நடத்தி வரும் ஹுசைன் அலியை இன்னும் கைது செய்ய முடியவில்லை .அவர் இன்னும் பலரோடு சேர்ந்து கொண்டு வெவ்வேறு நாடுகளில் இந்த ஆபாச படங்களை ஒளிபரப்பி வருகிறார் என்று போலீசார் தெரிவித்தார்கள் .இப்போது கைது செய்யப்பட்ட பொறியாளர் மற்றும் அவரின் கூட்டாளிகள் அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .