×

தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்ற விவசாயி

ஒடிசா மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை விவசாயி கிஷோர் பத்ரா திரும்ப கடித்து அதனை கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா.இவர் இரவு வயலில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் காலில் ஏதோ கடித்தது போல இருந்தது. தனது கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டு வேகமாக ஓடியது. அதை விரட்டிய கிஷோர், அதனை கையில்
 

ஒடிசா மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை விவசாயி கிஷோர் பத்ரா திரும்ப கடித்து அதனை கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா.
இவர் இரவு வயலில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் காலில் ஏதோ கடித்தது போல இருந்தது. தனது கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டு வேகமாக ஓடியது. அதை விரட்டிய கிஷோர், அதனை கையில் பிடித்தார். அது விஷபாம்பு என்று தெரிந்தும் தன்னை கடித்த ஆத்திரத்தில் அதை பலமுறை கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது.

நடந்த விஷயத்தை மனைவியிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் கிஷோர் பத்ரா கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறி கிஷோர் பத்ராவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர், நாட்டு வைத்தியரிடம் சென்று நடந்ததை கூறி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அவர் உடல்நலனில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.