×

பெங்களூரு விமான நிலையத்தில் வெடி விபத்து : 6 பேர் படுகாயம்!

பெங்களூரு விமான நிலையம் அருகே பிளாஸ்டிக் பெயிண்டிங் இயந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் வருகிற 14-ஆம் தேதி வரை கர்நாடகாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு வருகின்ற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ஆம் தேதி காலை 6 மணி வரை
 

பெங்களூரு விமான நிலையம் அருகே பிளாஸ்டிக் பெயிண்டிங் இயந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் வருகிற 14-ஆம் தேதி வரை கர்நாடகாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு வருகின்ற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ஆம் தேதி காலை 6 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் கமல் பந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகே பிளாஸ்டிக் பெயிண்ட் இயந்திரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து விபத்தில் சிக்கி காயமடைந்த 6 பேரும் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.