×

பக்கவாதம் வந்த கோடீஸ்வரர் -பக்காவா பிளான் பண்ண வேலைக்காரர் -காத்திருந்த அதிர்ச்சி .

வயதான நோயாளி முதலாளியின் வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியதாக இரண்டு வேலைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையில் 74 வயதான பக்கவாத நோயாளியான ஒரு கோடீஸ்வரர் 10 ஆண்டுகளாக தனியாக தங்கியுள்ளார் .. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, அவரின் பிளாட்டில் வீட்டு உதவியாளராக பணியாற்ற ஷியாம்சுந்தர் யாதவ் (28)என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அங்கு 11 நாட்கள் வேலை செய்தபின், தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று
 

வயதான நோயாளி முதலாளியின் வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியதாக இரண்டு வேலைக்காரர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் மும்பையில் 74 வயதான பக்கவாத  நோயாளியான ஒரு கோடீஸ்வரர்  10 ஆண்டுகளாக தனியாக தங்கியுள்ளார் .. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, அவரின்  பிளாட்டில் வீட்டு உதவியாளராக பணியாற்ற  ஷியாம்சுந்தர் யாதவ் (28)என்பவர்  நியமிக்கப்பட்டார். அவர் அங்கு 11 நாட்கள் வேலை செய்தபின், தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு  பீகாரில் உள்ள தனது கிராமத்திற்கு புறப்பட்டார். அவர் புறப்படுவதற்கு முன்,  தனது உறவினர் அனில் யாதவை (37) முதியவருக்கு துணையாக வைத்தார் . பின்னர் அவரும் தனது மனைவி இறந்துவிட்டார் என்று கூறி தனது கிராமத்திற்குச் சென்றுவிட்டார்

பின்னர் அந்த  பெரியவரின் மகள் தந்தை வீட்டிற்குச் சென்றபோது ,அங்கிருந்த  உயர்தர கடிகாரங்கள், ரூ .3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சுமார் ரூ .40,000 ரொக்கம் காணாமல் போனதை  அவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து, அந்த முதியவரின் மகள்  கண்டிவ்லி போலீசில் அந்த காணாமல் போன வேலைக்காரர்கள் மீது புகார் கொடுத்தார் . போலீசார் தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி,வேலைக்காரர்கள்  ஷியாம்சுந்தரை மற்றும்  அனிலை கைது செய்தனர் . பின்னர்  இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது .