☰
×

`நள்ளிரவு 3 மணி வரை அலறும் இசை' - பிரபல நடிகர் போலீசில் புகார்

 

ஹைதராபாத் ஷேக் பேட் பகுதியில் உள்ள ‘அபர்ணா ஒன்’ குடியிருப்பில் வசித்து வரும் அல்லு சிரிஷ், எக்ஸ் தளத்தில் ஹைதராபாத் காவல் துறையைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி மற்றும் விசர்ஜன விழாவை முன்னிட்டு செப்டம்பர் 25 வரை பொறுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டது. ஆனால் விழா முடிந்த 3 பிறகும் இந்த இரைச்சல் நிற்கவில்லை. இதனால் எங்களது குடியிருப்பில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் மற்றும் காலையில் பணிக்குச் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே காவல் துறை உடனடியாகத் தலையிட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.


இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஃபிலிம் நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை எக்ஸ் தளத்திலேயே பதிலளித்துள்ளது.