×

“இது ஜனநாயகம்… உங்களின் அற்பமான மனுக்களை ஏற்க முடியாது” – பாஜகவை நோஸ்கட் செய்த உச்ச நீதிமன்றம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை பயன்படுத்தி மத்திய அரசு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சி டூல்கிட்டை உருவாக்கி ட்விட்டரில் பரவ விடுவதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சுமத்தியிருந்தார். அதாவது மத்திய அரசின் நடவடிக்கைகள், மோடியின் செயல்பாடுகள் குறித்து முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். இது ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு லிங்காக (Link) பகிரப்படும். இதுதான் டூல்கிட். இதனை காங்கிரஸ் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு ட்விட்டர்
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பை பயன்படுத்தி மத்திய அரசு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சி டூல்கிட்டை உருவாக்கி ட்விட்டரில் பரவ விடுவதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சுமத்தியிருந்தார். அதாவது மத்திய அரசின் நடவடிக்கைகள், மோடியின் செயல்பாடுகள் குறித்து முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். இது ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு லிங்காக (Link) பகிரப்படும். இதுதான் டூல்கிட். இதனை காங்கிரஸ் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு ட்விட்டர் இந்தியா நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைத்து டெல்லி போலீசார் டிவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் டிவிட்டர் இந்தியா அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தினர். இதற்குக் கடுமையான கண்டனங்கள் தெரிவித்த காங்கிரஸ் கட்சி டூல்கிட் எதையும் தாங்கள் உருவாக்கவில்லை என்றது. இந்நிலையில் காங்கிரஸ் டூல் கிட் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.எஸ். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “இதுபோன்ற அற்பமான காரணங்களைக் கூறி வரும் மனுக்களை ஏற்க முடியாது. இதுபோன்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு இதுவே சரியான நேரம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதை நீங்கள் அறிவீர்களா? இந்த மனுவை விசாரிக்க இயலாது” என்றார்.