×

“தமிழகத்தில் தேர்தல் நடத்த தடை வழக்கு” – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. தேர்தலை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் தேசிய கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழ்நாடு, புதுச்சேரியிலேயே முகாமிட முடிவெடுத்து விட்டனர். தற்போது ஐந்து மாநில
 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. தேர்தலை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் தேசிய கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழ்நாடு, புதுச்சேரியிலேயே முகாமிட முடிவெடுத்து விட்டனர்.

தற்போது ஐந்து மாநில தேர்தலை எதிர்த்தும், பிரதமர் மோடி பிரச்சாரத்துக்குச் செல்ல தடைவிதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மேற்கண்ட சில மாநிலங்களில் அரசுகளின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் முடிவடைகின்றன.

அவ்வாறு முடியும் முன்பே தேர்தல் ஆணையம் அங்கே தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆகவே பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் அறிவிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். அதேபோல பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். பிரதமர் மோடி ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையில் நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.