×

எஸ்பிபி மறைவு : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் !

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய
 

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல பாடகரான எஸ்.பி.பி, ஐந்து சகாப்தங்களுக்கு மேலாக தனது இசையின் மூலம் மக்களுக்கு உத்வேகம் அளித்து வந்தார். பாடகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளால் மக்களின் மனதை கவர்ந்த எஸ்.பி.பியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.