×

“இந்திய நடன பயிற்சியின் தாய்” பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்!

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நிர்மலா நக்பால். பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநரான இவர் 40 ஆண்டுகளாக திரைத்துறையில் நடன இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இதுவரை சுமார் 2 ஆயிரம் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இதனால் சரோஜ் கான் “இந்திய நடன பயிற்சியின் தாய்” என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் நடன
 

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நிர்மலா நக்பால். பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநரான இவர் 40 ஆண்டுகளாக திரைத்துறையில் நடன இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இதுவரை சுமார் 2 ஆயிரம் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இதனால் சரோஜ் கான் “இந்திய நடன பயிற்சியின் தாய்” என அழைக்கப்படுகிறார்.


இந்நிலையில் நடன இயக்குநர் சரோஜ் கான் மூச்சுத்திணறல் காரணமாக ஜூன் 20ல் மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் நடன இயக்குநர் சரோஜ் கான் தமிழில் தாய்வீடு,
இருவர், சிருங்காரம், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இதில் 2005 ஆம் ஆண்டு சிருங்காரம் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.