×

ஊரடங்கு காலத்தில் சம்பளம் குறைப்பா?… உரிமையாளர், ஊழியர் பேச்சு வார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது குறித்து முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வாய்ப்பு உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் வேலை செய்யாதவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், பல நிறுவனங்கள் ஊதியத்தைக் குறைத்த, பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. ஊரடங்கு காலத்துக்கான
 

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது குறித்து முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காலத்தில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வாய்ப்பு உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் வேலை செய்யாதவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், பல நிறுவனங்கள் ஊதியத்தைக் குறைத்த, பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின.

ஊரடங்கு காலத்துக்கான முழு சம்பளத்தையும் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கான உத்தரவை மீறிய உரிமையாளர்கள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடரும், இந்த வழக்கில் மத்திய அரசு ஜூலை கடைசி வாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர்கள், உரிமையாளர்கள் இடையே மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் அடிப்படையில் ஊதியங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.