×

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழப்பு

 

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பரஜ் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பரஜ் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவில் மது அருந்திய பலருக்கு சிறிது நேரத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் எங்கிருந்து விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்