×

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூலை 17 ஆம் தேதி திறப்பு

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஆனிமாத பூஜை காண பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜைகள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை ஆகியவை மட்டும் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக ஜூலை 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடை திறக்கப்படவுள்ளது. ஆன்லைன் பதிவு
 

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஆனிமாத பூஜை காண பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜைகள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை ஆகியவை மட்டும் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக ஜூலை 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடை திறக்கப்படவுள்ளது. ஆன்லைன் பதிவு முறையில் அதிகபட்சம் 5,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று சமர்பிக்க வேண்டும். முழுமையான கொரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர். மேலும் முழுமையான கொரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.