×

மகரவிளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா நோய் தொற்றால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி வரை நடை
 

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா நோய் தொற்றால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்றும் தினந்தோறும் 5000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாதவர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. இன்று மாலை திறக்கப்படும் நடை யானது ஜனவரி 20ஆம் தேதி சாத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.