×

சபரிமலை கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி… ஆனால் ஒரு கண்டிஷன்!

சபரிமலை கோவிலில் செப்.16ம் தேதி நடை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டுமென கட்டுப்பாடு விதித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பின் காரணமாக நடை அடைக்கப்பட்டுள்ளது. பூஜையின் போது மட்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், ஆவணி மாத பூஜைக்காக கடந்த மாதம் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜை முடிந்ததும் புஷ்பாபிஷேகத்துடன் 23ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மலையாள
 

சபரிமலை கோவிலில் செப்.16ம் தேதி நடை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டுமென கட்டுப்பாடு விதித்துள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பின் காரணமாக நடை அடைக்கப்பட்டுள்ளது. பூஜையின் போது மட்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், ஆவணி மாத பூஜைக்காக கடந்த மாதம் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜை முடிந்ததும் புஷ்பாபிஷேகத்துடன் 23ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி முதல் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். கொரோனோ கட்டுப்பாடு தளர்வின் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தினசரி அனுமதிக்கப்படுவர்.

தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தேவசம் போர்டு கட்டுப்பாடு விதித்துள்ளது. இல்லையெனில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை வைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்கள் தரிசனம் முடிந்த பிறகு 21ம் தேதி மீண்டும் நடை அடைக்கப்படும் என்றும் தேவசம் போர்டு கூறியுள்ளது.