×

5 மாதங்களுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டு இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா காலம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.தந்திரி கண்டரரு
 

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டு இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா காலம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைத்தார். இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை கோயில் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் தினசரி 5000 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 48மணிநேரத்திற்கு முன்பு எடுத்த ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பக்தர்களின் மருத்துவ சான்றிதழ் நிலக்கல்லில் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.