×

சபரிமலை 453 சவரன் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்தார். கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம்
 

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்தார். கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தி அழகு பார்க்க 453 சவரன் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. பந்தளம் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பந்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. 25ஆம் தேதி சபரிமலை செல்லும் தங்க அங்கியை ஐயப்பனுக்கு அறிவித்த பின்னர் மறுநாள் மண்டல பூஜை நடக்கிறது.

கொரோனா பரவல் அச்சத்தினால் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.