ரூ.3,000 ஓராண்டு பாஸ் முறை - நாளை முதல் அமல்
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வருடாந்திர பாஸ் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலை சோதனைச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் சலுகைக் கட்டணத்தில் ஓராண்டு பாஸ் முறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
தற்போதுள்ள ஃபாஸ்டேக்கையே, ரூ.3000 செலுத்தி ஓராண்டு சலுகைக் கட்டண பாஸாக மாற்றிக்கொள்ளலாம். ராஜ்மார்க்யாத்ரா செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் பணம் செலுத்தலாம். 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள பிரச்சனைக்கு இது தீர்வாக இருக்கும்.